'இருக்கிறம்'
Wednesday, August 3, 2011
25.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 17

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!!!
“கறுப்பு ஜூலையின் கறுப்பு நினைவுகள்”
தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் பற்றிய ஓர் வரலாற்றுப் பார்வை.
“யாழில் மிரட்டும் மினிவான்கள்”
யாழ்ப்பாண மினிவான்களில் நடக்கும் அட்டகாசங்களை வெளிக்கொண்டுவரும் உண்மையின் பதிவு.
“பீமன்கல் கிராமம் இழந்து நிற்கும் பொருளாதார வளம்”
நேரடி ரிப்போர்ட்
“சமுதாயத்தின் மறுபக்கம்”
இப்படியும் நடக்கிறது ஓர் தொகுப்பு.
“அபிவிருத்தியை நோக்கி….”
அபிவிருத்தியின் பதிவுகள்.
“அரசியல் சூழலுக்கு அவசியமான பாதுகாப்புச் சபைப் பிரேரணை – 1325”
தருவது மிஸ்டர் குரோ
“பாசம் + சட்டம் ஸ்ரீ கண்ணீர்”
தெய்வத் திருமகள் திihப்பட விமர்சனம்.
மேலும் பல வித்தியாசமான அம்சங்களுடன் வெளிவந்துவிட்டது இவ்வார இருக்கிறம் இதழ்.
Monday, July 25, 2011
18.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 16

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!
“விடுதலைப் புலிகளோடு முடிந்துவிட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுப் பாத்திரம்”
-அரசியல் கட்டுரை தருவது மிஸ்டர் க்றோ
“ஓமந்தை வரையிலான யாழ்தேவியின் பயணம்”
- ஸ்பெஷல் ரிப்போர்ட்.
“நாற்காலிக்காக நடாத்தும் போராட்டம்”
-எஸ்.எம்.கோபாலரத்தினம்
“உறவின் குரல்கள்” காணாமல் போன உறவகளின் கண்ணீர்க் கதறல்கள்
புனரமைக்கப்படும் “யாழ் கோட்டை” ஓர் வரலாற்றுப் பொக்கிஷம்
-நேரடி ரிப்போர்ட்
மாற்று வலுவுடைய யாழ் மாணவன் துசியந்தனின் ஒலிம்பிக் சாதனை
-யாழில் இருந்து எஸ்.ஏ.யசீக்
“கூடாரங்களில் வாழும் கொக்கிளாய் மக்கள்” கவர் ஸ்டோரி
பூர்வீகக் கிராமமொன்றின் கதை
-வன்னியிலிருந்து நேரடி ரிப்போர்ட்
11.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 15

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!
மறைந்தும் மனங்களில் வாழும் ‘மாமனிதன்’
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நினைவுப் பகிர்வு
“நம்பிக்கையுடன் மீண்டெழும் கனகராயன்குளம் கிராமம்”
வன்னியிலிருந்து ஓர் நேரடி ரிப்போர்ட்
எம் உணர்வுகளை உருக்கும் “உறவுகளின் குரல்கள்”
காணாமல்போன உறவுகளின் கண்ணீரின் கதறல்கள் தொகுப்பு
அரசியல்வாதிகளால் “பழிவாங்கப்படும்” அரச அதிகாரிகள்
“மீள்குடியேற்றப்பட்டும் மீட்சிபெறாத யாழ் குடாநாட்டு முஸ்லிம் மக்கள்”
யாழில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்
“அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் காலம் கடத்துவதற்கு ஒரு தெரிவுக்குழு”
எஸ்.எம்.ஜி தரும் அரசியல் கட்டுரை
“கண்ணீரைத் துடைக்குமா காலம் தாழ்ந்த நீதி”
இலங்கையின் இனப்படுகொலையை நினைவு படுத்தும்
“கம்போடியாவின் கொலைக் களங்கள்”
Friday, July 15, 2011
Friday, July 1, 2011
04.07.2011 திங்கள் வெளிவரும் இருக்கிறம் வாரஇதழில்

வாசிக்கத் தவறாதீர்கள்!!!
"இருக்கிறம்"வாரஇதழ் 14 இல்….
சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் “இலஞ்சம்”
-வசமாக மாட்டிக்கொண்டார் வாயிற்காவலாளி
“தலைமைத்துவ பயிற்சிகள் இராணுவ முகாம்களுக்குள் ஏன் நடக்கவேண்டும்?”
-கேள்வியெழுப்புகிறார் பேராசிரியர் ஹெட்டிகே
“வன்னியிலிருந்து வந்தவர்களை வேற்று மனிதர்களாக நடத்துகிறார்கள்”
-கோப்பாயிலிருந்து நேரடி ரிப்போர்ட்
அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து நிற்கும் வவுனியா இளமருதங்குளம் மக்கள்
-வவுனியாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்
அழிவிலிருந்து மீண்டெழும் கிராமத்தின் கதை – பூநகரி
Sunday, April 3, 2011
Tuesday, March 29, 2011
இருக்கின்ற எல்லோருக்காகவும் தொடர்ந்து இருப்பம்!!

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சி கை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனை வருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற் கான கருப்பொருளோ. அச்சுத்தரமோ, வாசகர் களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால் தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இலக்கியத்தைப் பிரதான பொருளாகக் கொண்டுள்ள சிறுசஞ்சிகைகள் மட்டும்தான் இலங் கையில் தமது இருப்பை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்சுவைகளையும் கொண்டு ஒரு சமூக சஞ்சிகையாக தமிழக சஞ்சி கைகளுக்கு நிகராக கடந்த மூன்று வருடகாலமாக இருக்கிறம் வெளிவந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே!
மக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஜனநாயகக் கட்டமைப்பானது, ஒரு சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் கண்ணோட்டங்களை மாற்றினாலேயன்றி உருவாக முடியாது. இதனால், ஒரு நீண்ட கால நோக்கில், பரந்துபட்ட மக்களுடன் உரையாடும் ஒரு ஊடகமாக, சமூகத்தின் கருத்துருவாக்கத்தினை ஏதுவாக்கும் முற்போக்கான விழுமியங்களை விதைக்கும் கருவியாக “இருக்கிறம்” சஞ்சிகை 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதன்படி, மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதுடன் வித்தியாசமான மக்கள் குழுமங்களின் மற்றும் சமூகங்களின் குரல்களைப் பிரதிபலித்தும் ஊடகமாகவும் இருக்கிறம் இருந்து வருகின்றது. எமது பாரம்பரிய விழுமியங்களை எங்கு கேள்வியெழுப்ப வேண்டுமோ அங்கு துணிந்து கேள்விக்குட்படுத்துகிறது. மக்களைப் பொறுப்பு மிகுந்த பிரஜைகளாக மாற்றும் கடமையை அது தவறாது செய்தும் வருகின்றது. மக்கள் தொடர்ந்து ஆதரிக்கும் தங்குதிறன் மிக்க சஞ்சிகையாக இருக்கவேண்டுமென்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த அம்சங்கள் கூட சஞ்சிகையின் கொள்கைகளை அடியொற்றி அமைக்கப்பட்டு இருப்பது இருக்கிறமின் தனிச்சிறப்பு ஆகும்.
புதிய மாற்றத்தை நோக்கியும் இளைஞர்களிடையே சமூகசேவையையும், புதிய சிந்தனை மாற்றத்தையும் தோற்றுவிக்கவேண்டுமென்ற குறிக்கோளுடன் இருக்கிறம் இன்று 64 இதழ்களாக வெளிவந்து இலங்கையில் நீண்டகாலமாக (4வருடங்களாக) வெளிவரும் ஒரே ஒரு மக்கள் எழுச்சிமிக்க சஞ்சிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. இலங்கையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் 25க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளுக்கு மத்தியில், இலகுவான எவரையும் கவர்ந்திழுக்கும் தமிழ் நடையையும். வித்தியாசமான எழுத்துருவாக்க நடையையும், கொண்டு வெளிவருவது இருக்கிறமின் சிறப்பியல்பு.
தென்னிந்திய சொற்பிரயோகங்களும் எழுத்து நடையும் இலங்கை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற இக்கால கட்டத்தில் தனக்கேயுரிய தனிப்பாணியுடன் ஈழத் தமிழில் சொல்லாக்கங்களைப் பிரயோகிப்பது இருக்கிறமின் தனித்தன்மை. சிறந்த கவர்ச்சிகரமான பக்க வடிவமைப்பு, சொல்லாடல் மிக்க கதைச்சுருக்கம் என்பவையே இருக்கிறமை இன்று மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளன.
வெளியீட்டிலுள்ள தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் கடந்த ஜனவரிமாதத்துடன் 64வது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.
எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத் தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற் கொண்டனர். எனினும் மனதில் துணிவும் நம்பிக்கையும் ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிற முடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது.
கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் நிறுவனத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து இருக்கிறம் சஞ்சிகையை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு இந்நிறுவனத்தினரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழ்சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல்கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக் கவிருக்கும் இருக்கிறம் சஞ்சிகைக்கு இது சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது.
Monday, March 28, 2011
“இருக்கிறம்” இதழ் 64

அண்மையில் நாம் சந்தித்த பாரிய வெள்ள அனர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறமின் 64வது இதழ் வெளி வந்துவிட்டது.
அண்மையில் தமிழினத்திற்குத் தலையிடியாகிப்போன இலங் கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மாத்திரமே இசை க்கப்பட வேண்டும் எனும் அமைச்சரவைத் தீர்மானம் பற்றிய சிற ப்புக் கட்டுரையானது தமிழருக்கெதிரான புதிய அடக்கு முறைகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பதை புலப்படுத்தி நிற்கி ன்றது.
இன்று வைத்தியசாலைகளில் மற்றும் அதற்காக வேலைசெய்யும் பிற ஊழியர்கள் நோயாளிகள் மீது காட்டும் அக்கறையில்லாத அலட்சியப்போக்கை இவ்விதழின் உண்மையின் பதிவு உதாரணத்துடன் விளக்கியுள்ளது.
இலங்கையில் எழுத்தாளர்களுக்கான இன்னுமொரு மைல் கல் லாக நடந்து முடிந்திருக்கிறது சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இதைப்பற்றிய ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளே…
“சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியந்தானா..” என்ற சிந்துஜாவின் கட்டுரையில் இன்றைய நவீன உலகில் இவ்வாறான வழக்கங்கள் மாறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
“தெய்வ நிந்தனையின் பெயரால் உருவாகும் மதத்தீவிரவாதம்” யாவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை.
விளையாட்டுப் பிரியர்களுக்கு 'சாதனைகளும் வேதனைகளும்" ஓர் தொகுப்பாகத் தந்திருக்கின்றார் மயூரன்...
நேரிய சிந்தனை எம்மை நெறிப்படுத்தும் எனக்கூறும் வைத்தியர் முருகானந்தன் அவர்களின் மருத்துவக்கட்டுரை விரிவாக உள்ளே....
மேலும் 'வானத்தால் குதிக்கும் வடலிகள்" எனும் சிறுகதையும், 'தலையில்லா முண்டங்கள்" கவிதையும் இன்றைய யதார்த்தத்தைக் காட்டிநிற்கின்றது.
எமது இருப்பை கடத்தல்கள்,கொள்ளைகள் ஒருபக்கமும் இயற்கை அனர்த்தங்கள் மறுபுறமுமாக கேள்விக் குறியாக்கியிருக்கின்றது என்பதை புலப்படுத்தியிருக்கின்றது ஆசிரியரின் இருப்பு...
இன்னும் இளமை புதுமை கலாட்டா கட்டுரைகள் கவிதைகள் அறிவியல் தகவல்கள் தொழிநுட்பம் என அனைத்து அமசங்களையும் தாங்கி வந்திருக்கின்றது இம்மாத இருக்கிறம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
“இருக்கிறம்” இதழ் 63

இருக்கிறமின் 63 ஆவது இதழ் கோர யுத்தத்தின் விம்பங்களைப் பிரதிபலிக்கும் அடையாளங்களைச் சுமந்து, யுத்த அழிவுகளில் இருந்து மீள எத்தனிக்கும் மாங்குளத்தின் புகைப்படத்துடன் வெளிவந்து விட்டது.
இருக்கிறமின் இந்த இருப்பும் வாசகர்களுக்கு விருந்து படைக்க பல்வேறு புதிய அம்சங்களுடன் இருக்கிறது. புனரமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்களும், புதிது புதிதாக முளைக்கும் புத்தவிகாரைகளும் மாறிப்போன மாங்குளத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. இது தொடர்பான தகவல்கள் நேரடி ரிப்போர்ட்டில்….
'அவலங்களின் மீது நடாத்தப்படும் அற்ப அரசியல்" எனும் சிறப்புக் கட்டுரை இடப்பெயர்வின் பின்னரும் தமிழ் மக்களைத் தொடரும் வறுமை நிலை, மீள்குடியேறிய பின்னர் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை முன்வைத்து அரசியல்வாதி களால் அரங்கேற்றப்படும் அற்ப அரசியல் என்பவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது.
உண்மையின் பதிவில் மலையகப்பெண்களின் அவல நிலை அலசப்பட்டுள்ளது.
விடிவைநோக்கிய உறவுகளுக்குக் கைகொடுப்போம்” எனும் தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களின் வன்னிக்கான கல்விப்பயணம் , இன்னமும் நாம் கல்விச்செல்வத்தினை இழக்கவில்லை என்பதனை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டு ள்ளது.
“தமிழர் பண்பாடும் நாகரிகமும்” எனும் சிறப்புக்கட்டுரை வரலாற்றை ஒருமுறை திரும்பிப்பார்க்க சந்தர்ப்பமளிக்கின்றது..
எம். சகாப்தீனின் “ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?” என்ற ஆய்வுக் கட்டுரையில், முஸ்லிம் தலைமைகள் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றிய சரியான தரவுகளுடன் சாட்சிய மளிக்கமையே, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கான காரணம் என்பதை சுட்டிக் காட்டி நிற்கின்றது.
இழப்பதற்கு இனி எதுவுமின்றி இருக்கும் எம்மினத்திற்கு இனி இருப்பது 'பேனா" எனும் பலம் ஒன்றே என்பதை இருத்தி 'பேனாக்கள் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியரின் இருப்புடன் இம்மாத இருக்கிறமின் இருப்பை உணர்த்தி நிற்கின்றது இம்மாத இருப்பு. இன்னும் கட்டுரை, சிறுகதை, கார்ட்டூன், திரைப்பார்வை, மருத்துவப்பார்வை, என்பவற்றுடன் இம்மாத 'இருக்கிறம்" வெளிவந்துள்ளது.
படித்துப் பாருங்கள். உங்கள் பெறுமதிமிக்க விமர்சனங்களை ஏற்க எம் கருத்துக்களம் என்றுமே தயாராக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)

