'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Monday, November 2, 2009

வருகைதந்த வலைப்பதிவர்களுக்கு நன்றிகள்!!





31 comments:

  1. விழாவையும் பார்த்தேன்,விழா முடிந்த பின் வந்தவர்களின் வலைப்பதிவையும் பார்த்தேன்.

    வந்தது எல்லாம் சரி தான்.வந்திட்டுப்போன பின் என்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம்.ஒன்று,இரண்டு பேருக்காக எல்லோரையும் குறை கூற முடியாது.என்றாலும் கூறாமலும் இருக்க முடியாது.
    "நன்றி மறப்பது நன்றன்று.அன்றேல் அன்றே மறப்பது நன்று"
    என்ற கூற்றுக்கு இணங்க வந்தவர்களில் சிலர் நன்றாகவே தமது நன்றியறிதலைக் காட்டியிருந்தார்கள்.தமது வலைப்பதிவுகளை மிக நன்றாகவே பயன்படுத்தியிருந்தார்கள் நடாத்தியவர்களை வாழ்த்துவதற்கு.
    ஆகவே வாழ்த்தியோருக்கு நன்றி,வாழ்த்த மறந்தவர்களுக்கும் நன்றி.ஏனையோர்கள்.......அவர்களுக்கே தெரியும் அவர்கள் செய்தது என்னவென்று.....

    ReplyDelete
  2. இருக்கிறம் வாசகன்..............

    நன்றாகச் சொன்னீர்கள் நீங்கள்,
    உண்மையில் "இருக்கிறம்" இனி வரும் காலங்களில் அவ்வாறு இகழ்ந்தவர்களின் ஆக்கங்களை பிரசுரிக்கக் கூடாது.அதில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.வலைப்பதிவு என்பது ஒரு சில நபர்களுக்குத் தெரிந்த ஒரு குறிகிய வட்டத் தொடர்பாடல்.அப்படி ஒன்று இருப்பது அனேகமானவர்களுக்குத் தெரியாது.அப்படியானவர்களை எல்லாம் ஏன் "இருக்கிறம்"தெரிவு செய்து விழா எடுத்ததோ???
    நன்றாக பாடம் கற்றிருப்பார்கள்.

    ReplyDelete
  3. வலைப்பதிவர்களை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தியதை மறந்துவிட்டார்களா?

    ReplyDelete
  4. தாங்கள் தெரிவிக்கும் கருத்து மேல் நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் பெயருடன், மின்னஞ்சல் முகவரியுடன் கருத்துக் கூறலாமே?
    ஏனிந்த இழிவான செயற்பாடு?

    எங்கள் கருத்துக்களை நாங்கள் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம்.
    ஆனால் அதை சரியாக ஏற்றுக் கொள்வதும், இல்லாததும் இருக்கிறமினதும் அவர்களின் வாசகர்களினதும் பொறுப்பு.
    எனது வலையில் சொன்னதை சொல்கிறேன், எங்களுக்கும் இருக்கிறமிற்குமிடையில் தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது.

    ReplyDelete
  5. கோபி சொல்லுவதுதான் எனது கருத்தும் தனது சொந்த பெயரை தெரிவிக்க முடியாத ஒருத்தருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் பதிவருக்கில்லை.

    பதிவர்களுக்கு விழா எடுத்தாக கூறியிருக்கும் அனாணி நண்பருக்கு, பதிவர்களி்டம் ஏதோ ஒரு விடயம் இருப்பதால் தானே அவர்களை அழைத்திருந்தார்கள். இல்லாவிடின் சும்மா ரோட்டில் போற ஒருத்தரை அழைத்து சந்திப்பு நடத்தியிருக்கலாம்தானே.

    தனிப்பட்ட ரீதியில் இருக்கிறத்தை பற்றி எனக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் கிடையாது. காரணம் எனது பதிவொன்றை அவர்கள் எடுத்து ஆக்கமாக வெளியிட்டார்கள், ஆனால் ஒரு நாகரீகத்துக்காகவாவது அதை எனக்கு ஒரு பின்னூட்டமாகவோ, மின்னஞ்சலாகவோ அறியத்தந்திருக்கலாம். அதை கூட செய்யவில்லை. இதை தெரிவித்து நான் அவர்களுக்கு அனுப்பிய மின்மடலுக்கு மறுமொழியும் அனுப்பப்படவில்லை.

    நண்பரே ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். “இருக்கிறம்” ஐ நம்பி பதிவர்கள் பதிவு எழுதவில்லை.

    அச்சு வலை சந்திப்பு என கூறிய வர்கள் கடைசியில் செய்தது என்னவென்றால் பதிவர்களுக்கு பாடம் நடத்தியதுதான். இப்படிதான் இந்த நிகழ்வு நடக்குமென்பது நடக்குமென நிகழ்ச்சி நிரலை அறிவித்திருந்தால் பல பதிவர்கள் கலந்து கொண்டிருக்கமாட்டார்கள். அதிகமாக போனால் ஒரு 10 அல்லது 15 பேரை வைத்து அவர்களது நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருக்கும்.

    இதில் நாங்கள் எதிர்பார்ப்பது “இருக்கிறம்” சார்பில் தன்னிலை அறிக்கை ஒன்றை. இல்லாவிடின் இன்னொரு முறை இருக்கிறத்தோடு பதிவர்கள் இணைவது கேள்விக்குறியாகிவிடும்.

    ReplyDelete
  6. சிவா வத்தளை......
    "இருக்கிறம்" நீண்ட நாட்களாக நான் வாசித்து வருகிறேன். ஆனால் எனக்கு வலைப்பதிவைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. ஏன் "இருக்கிறம்" இப்படியானவர்களை அழைத்து அவமானப்படுகிறதோ தெரியவில்லை.மிகவும் கேவலமாக விமர்சிக்கின்றனர்.
    பெயர் குறிப்பிடவில்லை என்று ஒருவரை மதிப்பிற்குரிய திரு யோகா அவர்கள் கூறினார்(பயமாக இருக்கிறது இவர்களுடன் பேச ஏனென்றால் நாளை எனது குடும்பத்தையே சந்தி சிரிக்க வைத்து விடுவார்கள்)அவருக்குத் தெரிந்திருக்கும் வலைப்பதிவர்கள் எத்தனை பேர் சொந்தப் பெயர்களில் எழுதுகின்றார்கள் என்றும்.எத்தனை பேர் மொட்டைக் கடிதம் எழுதுகின்றார்கள் என்றும்.பணம் செலுத்தத் தேவையில்லை,சொந்த விபரம் கொடுக்கத் தேவையில்லை என்றால் சும்ம குப்பன்,சுப்பன் எல்லாம் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது பின் தங்களுக்குத் தெரிந்த வரையில் தமக்கு பிடிக்காதவர்கள்,விரும்பாதவர்கள் எல்லோரையும் வாய்க்கு வந்த படி விமர்சிக்க வேண்டியது.இதைத்தான் அவர்கள் வலைப்பதிவிலும் செய்கிறார்கள்.
    இதில் "இருக்கிறம்"நிறையத் தவறு விட்டிருக்கிறது.இன்னொருவரின் ஆக்கத்தை அவரின் அனுமதி இன்றி எப்படி பிரசுரிக்க முடியும்?
    என்னைப் பொறுத்தவரை ஒருவன் முன்னுக்கு வர முயற்சி செய்யும் போது அவனை ஊக்கப்படுத்த மனம் இடம் கொடுக்கவில்லை என்றாலும்,அவனை குத்தி அமத்தாமல் இருந்தால் போதும்.
    நான் வெளியில் இருந்து பார்பவன் எனக்குப் பட்டதை நான் கூறினேன்.பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  7. பெயர் குறிப்பிடாத அதே வாசகன் தான்......

    திரு.யோகா அவர்களே,
    விலாசம் இருப்பவனுக்குத் தான் நாங்களும் பெயர்,முகவரி சொல்லி கதைக்க வேண்டும்.மற்றவர்களுக்கெல்லாம் சொல்லத் தேவையில்லை.நீங்கள் சொன்னது சரி தான் ரோட்டில் நிற்பவர்களை அழைத்து விழா நடத்தியது போல தான் இருந்தது உங்கள் கருத்துகள்.(சிறிய மாற்றம்-எல்லோரும் இல்லை ஒரு சிலர் தான்)உங்கள் அபிப்பிராயத்துக்காக "இருக்கிறம்" காத்திருக்கவில்லை.உங்கள் அபிப்பிராயம் எப்படி இருக்கும் என்று இப்பவே தெரியுதே.உங்களை நம்பியும் அவர்கள் "இருக்கிறம்"சஞ்சிகை ஆரம்பித்திருக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
    உண்மையாகவே அந்த ஒழுங்கான, மற்றவர்களையும் மனிதனாக மதித்து நடக்கக் கூடிய 10,15 பேர் வந்திருந்தால் அவர்களின் விழா இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
  8. வணக்கம் யோகா,

    அச்சுவலை சந்திப்பு பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. அன்று நிகழ்வு பற்றிய முதலாவது பதிவை இட்டவன் நானாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கின்றேன். அதன் பிறகு எல்லோரும் இட்ட பதிவுகளை அவசரமாக வாசித்தேன். ஒரு சிலதில் தான் பின்னூட்டம் இட்டேன். ஏனெனில் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். அதற்கு எனக்கு அவகாசம் கிடைக்கவில்லை.

    அன்றை சந்திப்பு பற்றி நான் விளக்கம் தர தேவையில்லை. லோஷன் அண்ணாவினுடையதும் வந்தியண்ணாவுடையதுமான பதிவுகளை வாசித்தாலே போதுமானது. ஆனாலும் சில விடயங்களை சொல்லத் தான் வேண்டும். அக்டோபர் 6ஆம் திகதி வந்தியண்ணாவின் “இருக்கிறத்தில் வலைப்பதிவர்கள்” என்ற பதிவுக்கு நான் இட்டிருக்கும் பின்னூட்டங்களை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். அதைத் தான் இங்கும் வழிமொழிகின்றேன். “உங்களைப் போல மனம் படைத்தவர்களின் ஆக்கங்களை பிரசுரித்த இருக்கிறத்துக்கு இதுகும் வேணும், இன்னும் வேணும்” (நான் உங்களை குறைகூறவில்லை, இருக்கிறத்தைத் தான்)

    நிகழ்வைப்பற்றி புரிந்து கொள்ளாமல் நீங்கள் கண்டியில் இருந்தென்ன கட்டாரில் இருந்து வந்தாலும் இருக்கிறம் என்ன செய்யும்?. இன்று வலைப்பதிவு எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய ஊடகம். அதில் தான் “அச்சுவலை சந்திப்பு” பற்றி முதலில் கூறப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு பிறகு ஆயிரம் விளக்கங்கள் கேட்கும் உங்களைப் போன்றவர்களால் ஏன் ஆரம்பத்தில் ஏன் இந்த சந்திப்பு? யார் யார் கலந்து கொள்வார்கள்? என்ன விடயங்களை பேசுவார்கள்? இதன் மூலம் யாருக்கு இலாபம்? போன்ற எதையாவது கேட்கத் தோன்றியதா? அவ்வாறு ஒரு பதிவு எங்காவது இருந்தால் காட்டுங்கள். அச்சுவலைச்சந்திப்பு பற்றிய தெளிவான விபரங்களை நான் பலபேருடைய பதிவுகளில் காட்டுவேன். என்னுடைய வலைப்பதிவை விட பேஸ்புக்கை பலபேர் பார்ப்பார்கள். அதில் நான் இட்ட சிறிய பதிவு “எல்லோரும் வந்து போக இது என்ன திருவிழாவா? தலைப்பை கவனமாக பார்த்து வாங்கோ... வலைப்பதிவர்களின் சந்திப்பு என்றும் தவறாக நினைத்துவிடாதீர்கள் (வினோதன் மண்டபத்தில நடந்தது போல)”

    என்னை பொருத்தவரை இருக்கிறம் திட்டமிட்டபடி தான் நிகழ்வை கொண்டு நடத்தியது. என்னில் நம்பிக்கை இல்லாவிடின் மேல்குறிப்பிட்ட இரு பதிவர்களிடம் விசாரித்தால் நலம் என நினைக்கின்றேன். விளங்காமல் வந்தது யார் குற்றம்??? நீங்கள் இருக்கிறத்திடம் இருந்து என்ன படித்தீர்களோ தெரியாது. இருக்கிறம் உங்களிடம் இருந்து நிறையவே படித்த விட்டது. “இருக்கிறம் விளம்பரத்திற்காக உங்களைப்பயன்படுத்தி விட்டது” என கூறும் நீங்கள் உங்களை அறியாமலே மேலும் விளம்பரப்படுத்தி விட்டீர்கள். அதனால் ஒரு நல்ல செய்தியையும் கூறுகின்றேன். இருக்கிறத்தின் இந்தமாத இதழ் போட்ட அனைத்த கடைகளிலுமே பெரும்பாலும் விற்றுத்தீர்ந்து விட்டதாம். (நிர்வாகம் கூறியது)

    எழுதுவதற்கு நிறைய இருக்கின்றது. ஆனால் என்னால் 4 மணித்தியாலங்கள் மட்டுமே ஒரு நாளில் நித்திரை கொள்ள முடிகின்றது. இதற்கெல்லாம் இருக்கிறம் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். நானல்ல.. ஆனாலும் நிகழ்வு பற்றி பூரணமாக தெரிந்தவன் என்ற வகையில் தான் இந்த விளக்கம்.

    ReplyDelete
  9. சிவா - வத்தளை - உங்களிடம்....
    நாங்கள் சொந்தப் பெயரில் எழுதுவதும் குப்பன் சுப்பன் பெயரில் எழுதுவதும் எங்கள் விருப்பம்.
    நான் உங்களிடம் கேட்கிறேன், எத்தனை ஊடகவியலாளர்கள் தங்கள் சொந்தப் பெயரில், தங்கள் முகவரிகளோடு பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்?
    அவர்களிடம் நீங்கள் கேட்ட அதே கேள்வியைக் கேட்பீர்களா?


    வரோ அவர்களுக்கு,
    லோஷன் அண்ணா விமர்சிக்காததற்குக் காரணம் அவர் பிரபலமானவர், பொறுப்பான ஊடகவியலாளர் என்பதால் அவரது விமர்சனங்கள் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று. அவர் தனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லாததால் அவர் இருக்கிறம் சந்திப்பை திருப்தி என்றார் என்றில்லை.
    வந்தியத்தேவன் அண்ணாவும் இலங்கையில் உள்ள பிரபலமான பதிவர்களில் ஒருவர். அவர்கள் எங்களைப் போன்றவர்கள் போல இலகுவாகக் கருத்துக்களைத் தெரிவித்துவிட முடியாது.

    நீங்கள் எங்கள் கருத்துக்களுக்கு விடையளியுங்களேன்?
    ஏன் மற்றவர்கள் அப்படிச் சொன்னார்கள் என்று கதையை திருப்புகிறீர்கள்....

    http://tamilgopi.blogspot.com/2009/11/blog-post_05.html என்ற முகவரியில் எனது உண்மையான படத்தோடு பதிவிட்டிருக்கிறேன்...
    முடியுமானால் அங்கே உள்ள விமர்சனங்களுக்கு பதிலிடுங்கள்.

    நிகழ்வைப் பற்றி நாங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டுதான் வந்தோம்.
    எங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'வலைப்பதிவர்களுக்கும் அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு' என்று குறிப்பிடப் பட்டிருந்ததே தவிர 'இருக்கிறம் கலந்துரையாடல்' என்று குறிப்பிடப் படவில்லை.

    இடையில் இருக்கும் சில பெயரில்லா விஷமக்காரர்கள் தான் இருக்கிறமை பதிவர்கள் சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் திட்டுவது பொன்ற மாயையை ஏற்படுத்துகிறார்கள்.

    ReplyDelete
  10. திரு வரோ, திரு. சிவா, பெயர் குறிப்பிடாத நண்பர் அனைவருக்கும் வணக்கம். நான் கேட்டது இருக்கிறத்தின் சார்பில் தன்னிலை விளக்கம் அதை அவர்கள் கூறினால் அதற்கு மறு மொழி கூறுகிறேன். மற்றப்படி எனது நேரத்தை இங்கு செலவழிக்க நான் தயாரில்லை.

    திரு. வரோவிற்கு

    என்னை உங்களது பதிவில் தலைப்பில் இட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏதோ நான் சாப்பிடுவதற்காக சந்திப்பிற்கு வந்ததாக கூறியிருக்கிறீர்கள். படமும் போட்டிருக்கிறீர்கள்.

    ”இருக்கிறம்” சஞ்சிகையில் நீங்கள் உறுப்பினரா என கூறுங்கள். உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன். காரணம் ”இருக்கிறம்“ஐ விமர்சிக்கும் எல்லா இடத்திலும் நீங்களே பதிலளித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  11. அதே வாசகன் தான்......
    என்ன கோபி விதண்டாவாதம் கதைக்கிறீர்கள்.பெயர் குறிப்பிடுவது பற்றி நான் முதலில் கருத்துக் கூறவில்லை.அதைப்பற்றிக் கதைத்தது (யோகா,கனக கோபி)இருவரும் தான்.இப்போ என்ன முன்னுக்கு முரனாகக் கதைக்கிறீர்கள்.அந்த ஏனைய ஊடகவியலாளர்களை ஏன் கேற்க வேண்டும்?அவர்கள் ஒருவரும் இப்படி இழிவாக நடக்கவில்லையே.என்ன கோபி உங்கள் வலைப்பதிவை இருக்கிறம் ஊடாக விளம்பரம் செய்கிறீர்களா?ஏன் யாரும் பார்பதில்லையா?கவலைப் படாதீர்கள் "இருக்கிறம்" ஊடாக விளம்பரம் செய்து விட்டீர்கள் தானே இனிமேல் பார்ப்பார்கள்.
    உங்களுடன் பேசுவதில் எந்தப்பயனும் இல்லை.
    நீங்கள் உங்களுக்கு சரி என்பதை செய்யுங்கள்.பார்பவர்களுக்குத் தெரியும் யார் சரி, யார் பிழை என்று.
    எங்கேயும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.ஆனால் அவ்வாறு விமர்சிப்பதற்கும் ஒரு முறை உண்டு.
    "இருக்கிறம்" பிழை செய்திருக்கலாம்.ஆனால் அதை சுட்டிக்காட்ட வேறு நிறைய முறை இருக்கிறது.
    பொதுவான கருத்து என்னவெனில் எதை விமர்சிப்பதாக இருந்தாலும் நல்லதை வெளிப்படையாக நாலு பேர் கேட்கக் கூடியதாக சொல்ல வேண்டும்.கெட்டதை உரியவர்களுக்கு சொன்னால் போதுமானது.நீங்கள் சொல்லும் கருத்துகள் மற்றவர்கள் திருந்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.ஆகவே தான் "இருக்கிறம்"ஒரு தமிழ் மக்களுக்கு எடுத்துக் காட்டான சஞ்சிகை அதை கெடுத்து விடாதீர்கள்.எத்தனையோ சஞ்சிகைகள் எம் நாட்டில் தோன்றி மறைந்துள்ளன.ஆனால் இது அவை போல அல்லாது இரண்டு வருடங்களாக தொடர்ந்து வருகிறது.ஏன் அதை இன்னும் எழுச்சி பெற செய்யக் கூடாது?தமிழில் ஒரு சஞ்சிகை அப்படி வருவது தமிழனாய் இருக்கும் நம் அனைவருக்கும் பெருமை தானே?
    அழிந்து போகும் நிலையில் நாமும்.நம் மொழியும் இருக்கும் போது நமக்குள் இந்த பிரிவினை தேவை தானா?
    "யாவரும் சமம்" என்ற கருத்தில் தமிழை வென்றெடுப்போம் வாரீர்.
    இதற்கு மேல் கருத்து வெளியிட விரும்பவில்லை.

    ReplyDelete
  12. அதே வாசகனுக்கு...

    சிவா வத்தளையிருந்து என்பவரின் பதிலில் இது இருக்கிறது பாருங்கள்....
    // வலைப்பதிவர்கள் எத்தனை பேர் சொந்தப் பெயர்களில் எழுதுகின்றார்கள் என்றும்.எத்தனை பேர் மொட்டைக் கடிதம் எழுதுகின்றார்கள் என்றும்.பணம் செலுத்தத் தேவையில்லை,சொந்த விபரம் கொடுக்கத் தேவையில்லை என்றால் சும்ம குப்பன்,சுப்பன் எல்லாம் வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்க வேண்டியது பின் தங்களுக்குத் தெரிந்த வரையில் தமக்கு பிடிக்காதவர்கள்,விரும்பாதவர்கள் எல்லோரையும் வாய்க்கு வந்த படி விமர்சிக்க வேண்டியது.இதைத்தான் அவர்கள் வலைப்பதிவிலும் செய்கிறார்கள். //

    இப்போது உங்கள் முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வீர்கள்?

    எனக்கு வருகையாளர்கள் போதும்...
    எனக்கு இவ்வாறான இழிவான வழிகளில் விளம்பரம் தேடத் தேவையில்லை.
    இந்த வலைத்தளத்திற்கு வருபவர்களை விட எனது தளத்திற்கு அதிகமாக வருவார்கள் என்று நம்புகிறேன்.

    இருக்கிறம் சங்சிகையின் ஆசிரியரே இது ஒருவகையில் தங்களுக்கு விளம்பரம் தேடத் தான் என்று வெளிப்படையாகக் கூறினார்.
    நீங்கள் எதுவுமே தெரியாமல் வீணாக உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள்.
    இந்தத் தளத்திற்கு நானும் யோ வொய்ஸ்ம் நாமாக வந்து பதிலிடவில்லை.

    நீங்கள் எங்களைத் தாக்கியபடியால் வந்து விளக்கம் தந்தோம். அவ்வளவு தான்....
    ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்க முன்னர் அந்த விடயத்தைப் பற்றி ஏதாவது அறிந்துவிட்டுக் கதைக்கத் தொடங்குங்கள்....

    ReplyDelete
  13. நான் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவில்லை அதனால் இதுவரை அதைப்பற்றி கருத்து ஏதும் தெரிவிக்க வில்லை ஆனால் இதுபற்றி நடந்துவரும் வாதப்பிரதிவாதங்களைப்பார்க்கும்போது பலரது தலைகள் இங்கே உருளுகின்றன, அதிலும் பதிவர்களுக்கிடையே பல வாதங்கள் நடைபெறுகின்றன. அதனால் எல்லா பதிவுகளையும் பதில்களையும் வாசித்தேன், அதில் வரோ கூறியிருந்தார் அவரது பதிவில் "ஆனாலும் வேலிக்கு பின்னால் நின்று குலைக்கும் பெட்டை நாய்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை."
    இங்கேயும் பல நாய்கள் குரைக்கின்றன, ஆகவே முன்னால் வந்து குரைக்கும் ஆண் நாய்களுக்கு பதிலளியுங்கள் பதிவர்களே. ( எல்லாம் ஒரு ஆணாதிக்கம்தான்)

    ReplyDelete
  14. திண்ட சட்டிக்குள் மலம் கழித்த (பேண்ட)தமிழ் இணையத்தின் சிறுவர்கள்

    "கனககோபி" என்ற பெயரை பார்த்தவுடன் எனக்கு ஞாபகம் வருவது உலங்கு வானுர்தி என்று தமிழ்ச் சொல் ஒன்றை தமிழுக்கு தந்த ஒரு தமிழ் ஊடகவியலாளார் "கான பிரபாவை" தான் நினைக்க முடிகிறது.இன்னொன்றின் பெயரால் தன் பொயரை நிலைநாட்ட முனைகின்றவனை கருத்தில் கொள்ளாது போதல் மேன்னை தரும்.

    யோ வாய்ஸ் என்றவுடனே நான் நினைத்தேன் ஏதோ முலை முடுக்கெங்கும் அலறும் இணைய வானொலி என்று.எழுதுவதற்கும் கதைப்பதற்கும் வித்தியாசம் தெரியத பாமரர்தான் இப்படி புரியாமல் பெயர்வைத்துவிட்டு பீற்றித்திரிவார்.

    நீங்கள் இருவரும் உங்களுக்குள் பாரிய ஓட்டைகளை வைத்துக்கொண்டு இருக்கிறம் பற்றி பிளந்து கட்டுவது புதுமையாக இருந்தாலும் தமிழனுக்கு உரிய தரங்கெட்ட தம்பட்டக் குணம் உங்களிடம் கடுகளவும் குறையாமல் இருப்பது கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி.

    ஊடகவியலாரை பற்றி கதைப்பதற்கு உங்களைப் போன்ற வலைக்காரருக்கு என்ன அருகதை இருக்கிறது??ஊடகவியலாளனின் பனி என்ன என்று தெரியுமா உங்களுக்கு??ஊடகவியலார்கள் உங்களைப்போன்று நாலு சுவருக்குள் இருந்து கொண்டு அம்மா தரும் சாப்பாட்டை கரண்டியால் சாப்பிட்டுக் கொண்டு விசர்தனமாக வியாக்கியானம் எழுதுபவர்களென்றா நினைத்திர்கள்??உங்களைப் போன்று மானங்கெட்ட புளைப்பு நடத்துபவர்கள் இல்லை ஊடகவியலாளர்கள்.

    ஒருவன் தனது கருத்தைச் சொல்ல பெயர் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவனது பெயரை நீங்கள் கோட்கிறீர்கள் என்றால்,அவனது பதிவுகள் ஏதாவது இருக்குமென்றால் உடனே ஓடிச்சென்று தாறுமாறாக பின்னூட்டங்களை இட்டு அவனது குன்டிக்குள் வெடிவைத்த சந்தோசத்தில் குதிக்கத்தானே??

    எழுதுவதற்கு எத்னையோ விடயங்கள் இருக்க ஒருவரை ஒருவர் குறை கூறி எழுதி என்னத்தை கண்டீங்க??நாலு ஐஞ்சு இணையதளங்களை வாசிச்சு அதிலயிருந்து ஒரு முடிவுக்கு வந்து எழுதுறது இல்லை பதிவு. ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்கடா..பரதேசி பயலுகளா.

    வேற்று மொழிக்காரன்ட செலவில தமிழ்மொழியில இருக்கிறம் என்ற சஞ்சிகையை அச்சடிச்சு வெளியிடுறாங்க.அதில உங்கட ஆக்கங்களை போட்டு இலை மறைகாயாக நாலு சுவருக்குள் உள்ள உங்களை மாதிரி நாதியற்று இருப்பவர்களுக்கு களம் அமைத்து கொடுத்தால் உங்களுக்கு பெரிய நினைப்பு நீங்கள் பீதட்டுறது தான் இலங்கை ஊடகம் முழுக்க போகுது என்டு.நான் நினைக்கிறன் ஊடகங்க நிறுவனத்திற்கு முதல் போட்டு நடத்திறவன் எல்லாம் தரமான கேனையனாகத்தான் இருப்பான்.
    உங்களுக்கு தெரியுமா பத்திரிகைக்கு புதிதாக எழுதுபவர்களுக்கு பணம் வழங்குவதும் பழைய அல்லது இன்னொன்றில் வெளியான ஆக்கத்திற்கு நன்றி மட்டும் பதி்வதே பத்திரிகை துறையின் எழுதாத சட்டம். உங்களுக்கு பணம் தேவைப்படின் புதிய சாயல் இல்லாத ஆக்கத்தை எழுதி அனுப்புங்கள். பணத்திற்கு பணமும் அச்சு,பகட்டுக்கு பகட்டுமாச்சு.

    ReplyDelete
  15. Branavan wellawatta. laste comment is my own opinion.so im teling u tht i dont hav any blos lik u.i thing here after u ll be doing a good job in ur blos.

    pull the world 4 the change.
    dont fool outhers from ur words.

    thank you

    ReplyDelete
  16. நன்றி கருத்துக்கு......
    பொது ஊடகங்களில் உங்கள் வார்த்தைப் பிரயோகம் அவ்வளவு நன்றாக இல்லை.ஆனால் இப்படியானவர்களை விமர்சிக்க இந்த வார்த்தைப் பிரயோகத்தை தவிர வேறு வார்த்தை தமிழில் இல்லை.
    உண்மையில் அந்தப் படத்தை பார்க்க யாருக்கும் கோபம் வரும்.

    ReplyDelete
  17. ஒரு அழைப்பிதழை விளங்கிக்கொள்ள முடியாதவர்களா சமூகத்துக்கு நன்மை செய்ய பதிவுலகில் குதித்திருக்கிறார்கள்

    ReplyDelete
  18. அதே வாசகன் தான்......
    இருக்கிறம் ஆசிரியர் மிகத் தெளிவாக ஒரு அழைப்பிதழ் பிரசுரித்திருந்தார் இதே பதிவின் ஊடாக,அதனை கீழே இணைத்திருக்கிறேன்.அதைக் கூட தெளிவாக வாசித்து விளங்க முடியாத நீங்கள் எல்லாம் ஒரு வலைப்பதிவர்கள்.உங்களைப் போன்ற சிலரால் தான் மொத்த வலைப்பதிவர்களுக்கே அவமரியாதை.
    யோசித்துப் பாருங்கள் விழாவிற்குப் போய் சேர்ந்திருந்து கதைத்து,பழகி,உண்டு,குடித்து,விட்டு வீடு சென்ற பின் இந்த வேலை செய்கிற நீங்கள் எல்லாம் ஒரு மனிதரா?
    இதையும் விட ஒருவர் புகைப்படம் ஒன்றை பிரசுரித்திருக்கிறார்.அவரை நினைத்தால் உண்மையில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.நல்ல மனதைய உமக்கு.நீரெல்லாம் வீட்டில் அம்மாவின் சோறு தான் திண்டு வளந்தீரா?அல்லது ......????
    பிரணவன் நீங்கள் பாவித்த சொற்கள் உண்மையில் இவர்களுக்கு பொருத்தமானது தான்.ஆனால் பொதுவான இடத்தில் நீங்கள் பாவிப்பதால் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இல்லாமல் போய்விடும்.அதை கருத்தில் கொள்ளுங்கள்.


    //அச்சுவலைச் சந்திப்புக்கு வருகைதரவிருக்கும் வலைப்பதிவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.
    இது வலைப்பதிவர்களுக்கான சந்திப்பு மட்டுமல்ல. அதிகரித்துவரும் வலைப்பதிவர்களுக்கான அங்கீகாரமே இது. தம்மை ஊடகங்களுடன் இணைத்து ஊடகவியலாளர்களுடன் ஒரு உறவுப்பாலத்தினை கட்டியெழுப்புவதற்காக சந்திப்பாக இது அமைகிறது.
    ஸ்தாபக ஆசிரியர் இளையதம்பி தயானந்தா நேரடியான திரையில் ‘ஒன்லைன்’ மூலம் உரையாற்றவுள்ளார். அதே போல் வெளிநாடுகளில் வாழும் வலைப்பதிவர்கள் சிலரும் தோன்றுவதற்கு இருக்கிறார்கள். தொடர்ந்து ஊடகவியலாளர்களும் வலைப்பதிவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து கலந்து சங்கமிக்கும் நிகழ்வும் இடம்பெறும்.
    முக்கியமாக வலைப்பதிவர்களுடைய பிரச்சனைகளோ, குறைபாடுகளோ இச்சந்திப்பில் உத்தியோகமாக கலந்துரையாடப்படமாட்டாது என்பதையும் அறியத்தருகின்றோம்.
    ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவர்களுக்கிடையிலான நட்புரீதியான இணைப்பொன்றை ஏற்படுத்துவதே எமது முழு நோக்கம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
    பிறகென்ன சந்திப்பில் கலக்குவோம்.
    Posted by 'இருக்கிறம்' at 10:30 PM //

    ReplyDelete
  19. தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் இருக்கிறம் பதிவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை, இருப்பினும் ஒவ்வொருவரதும் கருத்துக்களைப் பார்க்கும் போது ஏதோ எனக்கும் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. பலரும் ‘இருக்கிறம்’த்தை குறை சொல்லுகிறீர்களே தமி;ழ்ச்சங்கத்தில் இடம் பெற்ற அச்சு வலைப்பதிவர்களின் சந்திப்பின் போது மீண்டும் ஒரு தடவை இப்பதிவினை ஒழுங்கு செய்வோம் என வாய்தம்பட்டம் விடுத்த அணைவரும் அந் சந்திப்பின் பின்னர் இதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ள வில்லை. ஆப்படி இருக்கையில் இருக்கிறம் இச் சந்திப்பினை ஏற்பாடு செய்தமை பெரிய விடயமல்லவா?

    வாய்சவடால் மட்டும் அடிக்கும் பெரியவர்களே இச்சந்திப்பில் கலந்து கொள்ளாமல் நான் எவ்வாறு எழுதுவது எனக் கேட்பது புரிகிறது இருந்தும் எங்களது உள்வீட்டுப் பூசல்கள் எதிர் வீட்டுப் பிள்ளைகளையே பாதிக்கக் கூடாது என்கிற சிறிய நப்பாசையில் தான் இதனை எழுதுகின்றேன். புலம்பெயர் தமிழர்களைக் கருத்தில் கொண்டு பகலரும் வலைப்பதிவில் எழுதுகின்றமை அனைவரும் அறிந்ததே அவ்வாறிருக்கக எதற்காக இந்த உள்வீட்டுப்பூசல்கள்?

    வரோதயனை குறிக்கோள் காட்டி பலரும் எழுதும் ஆக்கம் சிரிப்பாகத்தான் உள்ளது. விஜயின் திரைப்படம் வெளியிடப்பட்டிருந்த போது வரோதயன் லோசன் அண்ணாவுக்கு எவ்வாறு விமர்சனம் வழங்கினார்? அப்போது மட்டும் லோசன் அண்ணா ஊடகத்துறையில் புகழ்பெற்றிருக்க வில்லையா என்ன?

    ஊடகத்துறையில் இருக்கும் எந்த வோரு நபரும் தனியே ஆக்கங்களோடு நின்று விட வில்லை அதற்க்கு அப்பால் செய்தி என்ற ஒன்றும் உண்டு ஊடகவியலாளர்கள் என்பவர்கள் தனியே ஓய்வுநேர வலைப்பதிவினை நடத்துபவர்கள் அல்ல ஆகவே அவர்கள் ஊடகங்களில் புனைபெயரில் எழுத வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் வலைப்பதிவாளர்கள் என்ன தான் எழுதினாலும் ஊடகவியலாளர்களாக முடியாது. நீங்கள் குப்பன், சுப்பன் என்றல்ல எந்தப் பெயரில் எழுதினாலும் பரவாயில்லை தயவு செய்து ஊடகவியலாளர்களை உங்களுடன் இணைக்காதீர்கள். ஊடகவியல் என்பது கதிரை மேசையில் ஒய்யாரமாக இருந்து பொழுது போக்காக செய்வதில்லை எனவே ஊடகவியலாளரையும், வலைப்பதிவாளர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டாம்.ஊடகவியல் வேறு,வலைப்பதிவு வேறு!

    நன்றி

    ReplyDelete
  20. பிரணவன் here

    god job அதே வாசகன் and jeni

    i thing this is enough 4 thees burgers.
    who can read propoly they r the best writers,not only blogs its any where..

    do u want to be a good writer! read more..:-)

    ReplyDelete
  21. சகோதரா பிரணவன், எனது தந்தையனின் பெயர் கனகலிங்கம், எனது பெயர் கோபிகிருஷ்ணா... இரண்டையும் சேர்த்துத் தான் கனககோபி என்று வைத்தேன்.... நான் பதிவுலகத்திற்கு வர முன்னரே, பதிவுகளை வாசிக்கத் தொடங்க முன்னரே எனது மின்னஞ்சல் கணக்குகள் எல்லாவற்றையும் கனககோபி என்று தான் ஆரம்பித்தேன்....
    எனக்கு யாரினுடைய பெயரையும் மருவி வைத்து அதன் மூலம் பிரபலமடைய அவசியம் தேவையில்லை... நான் வலைப்பதிவிடுவது பிரபலமடைய இல்லை, நான் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்...

    யோ வொய்ஸ் என்பது யோவின் குரல்கள்... அது அவருடைய விருப்பம்...
    நான் உங்களிடம் கேட்டேனா ஏன் பிரணவன் என்று எனக்குப் பிடிக்காத பெயரை வைத்தீர்கள் என்று?
    ஏனய்யா உங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு போகவேண்டியத தானே?

    நாங்கள் ஊடகவியலாளர்களை தவறாக எதுவுமே கதைக்கவில்லை. ஒருவர் கதைக்கும் முழுவதையும் விளங்கிக் கொள்ள முடியாத மனநோயாளிகளிடம் கதைத்துப் பிரயோசனம் இல்லை.

    பொது இடத்தில் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தப் பழகுங்கள்.

    நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம், நிதிதரை கொள்வது போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது....

    உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது...

    சகோதரி ஜெனிக்கு:
    எங்கள் சந்திப்பு இடம்பெற எல்லா எற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
    நாங்கள் திட்டமிட்டபடியே எல்லாமே இடம்பெற்றுவருகின்றன.
    அதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
    நாங்கள் ஊடகவிலாளர்களாக விரும்புகிறோம் என்றோ, அவர்களோடு கொஞ்சிக் குலாவப் பொகின்றோம் என்றோ எப்போதாவது சொன்னோமா?
    ஏனிப்படி மனநோயாளர்கள் போலக் கத்துகிறீர்கள்?

    இருக்கிறம் சஞ்சிகை இதுவரை மெளனம் காப்பது ஏன்? எங்கள் கருத்துக்கள் பிழையாக இருந்தால் அதை பின்னூட்டமிட்டிருக்கலாமே?

    எங்களுக்கும் இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும்....
    இங்கு பின்னூட்டமிடும் செயற்பாடு பற்றியும் நாம் அறிவோம்.

    I just say to all these buggers, just get lost... especially for that wellawatte person... we know better than u to talk these vulgar stuffs.... It doesn't mean that we don't know, if we don't use...
    right?
    please study how to behave in a public place.

    We, bloggers, won't reply any of ur biased comments hereafter.
    if u really want any explanations, come and post in our srilankan tamil bloggers google group. we don't like to promote a blog by visiting frequently for arguments.
    thanks.
    bye.

    ReplyDelete
  22. @jeni
    //தமி;ழ்ச்சங்கத்தில் இடம் பெற்ற அச்சு வலைப்பதிவர்களின் சந்திப்பின் போது மீண்டும் ஒரு தடவை இப்பதிவினை ஒழுங்கு செய்வோம் என வாய்தம்பட்டம் விடுத்த அணைவரும் அந் சந்திப்பின் பின்னர் இதற்கான எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ள வில்லை.//

    இது என்ன கேள்வி ஜெனி?
    இது ஒன்றும் தலைவர், செயலாளர் கொண்ட அமைப்பல்ல... பதிவர்கள்தான் வாய்த்தம்பட்டம் விடுத்தார்கள்.. அதாவது நீங்கள்.. நாங்கள்.. நீங்கள்தான் அடுத்த சந்திப்பை ஆரம்பிக்கவேண்டும்...

    இன்னொருத்தன் ஆரம்பிப்பான் என்பதைவிட்டு நீங்கள் நாங்கள்தான் ஆரம்பிக்கவேண்டும்..

    //ஆனால் வலைப்பதிவாளர்கள் என்ன தான் எழுதினாலும் ஊடகவியலாளர்களாக முடியாது.//

    இவ்வாறான எண்ணப்பாட்டில் (எங்களை நாங்களே பெரியவர்களாக கருதிக்கொண்டு) வாழ்வியல் விடயங்களை சரியாக எழுத முடியும் எனத் தோன்றவில்லை..

    @கோபி,
    //நாங்கள் ஊடகவிலாளர்களாக விரும்புகிறோம் என்றோ, அவர்களோடு கொஞ்சிக் குலாவப் பொகின்றோம் என்றோ எப்போதாவது சொன்னோமா?//

    இவ்வகையான வாக்கியங்கள் ஒரு சிலரால் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்டு நிலையான தாக்கங்களை ஏற்படுத்திவிடலாம்... :)) பார்த்துப்பா...

    வேறென்ன... பின்னூட்டங்கள் ஆரோக்கியமானவையாகத் தெரியவில்லை.. யார் யாருக்கெல்லாம் சந்தோசமாக இருக்கிறதோ தெரியவில்லை.

    அனாமதேயங்களிற்கு பதிலிட மனது விரும்பினாலும் அவர்கள் அனாமதேயம் என்பது பலனைக்கொடுக்காது என்று புரிந்து தள்ளி நின்று வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது..

    ReplyDelete
  23. ஒரு சுற்று வட்டத்திற்குள்ளேயே தங்களுக்கு தாங்களே, தங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி மாறி மாறி கடிபட்டுக் கொண்டிருக்கின்ற, அல்லது அலட்டிக் கொண்டிருக்கின்ற, அல்லது விமர்சித்துக் கொண்டிருக்கிறதோடு நின்று விடாமல, தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு குடை பிடித்துக் கொண்டு, அல்லது வசைபாடிக் கொண்டு, அல்லது இன்னும் விளக்கமாக, விபரமாகச் சொன்னால் வாளி வைத்துக் கொண்டு இருக்கின்ற வலைப்பதிவாளர்களின் இன்முகத்தை திரும்பவும், (இன்முகம் - தங்களது வழமையான அலட்டல், கடிபடுதல், விமர்சித்தல், குடை பிடித்தல், வாளி வைத்தல், வசைபாடுதல்களை செய்வது) இன்னுமொரு சந்தர்ப்பத்தில் வெளிக்கொணர்ந்த சந்தர்ப்பத்தை (அச்சுவலைச் சந்திப்பின் மூலம்) வழங்கிய இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள் பல கோடிகள்.
    இருக்கிறம் சஞ்சிகையின் இந்த அச்சுவலைச் சந்திப்பின் நோக்கம் பற்றி இருக்கிறம் சஞ்சிகை தனது இணைய அழைப்பிதழிலேயே தெளிவுபடுத்தி விட்டது.
    சில வலைப்பதிவர்கள் தங்களது இன்முகத்தை நேரடியாக காட்டுவதற்கு (அச்சுவலைச் சந்திப்பில்)இருக்கிறம் சஞ்சிகை சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்று நான் நினைக்கின்றேன். அதனால் தான் நன்கு உண்டு களித்த பின்பு (வீடு சென்று அது செமித்த பின்பு) தங்களது இன்முகத்தை வேறு வழியில்லாமல் தங்களது வலைப்பதிவில் காட்டித் தீர்த்திருக்கிறார்கள் (மன்னிக்கவவும் எல்லா வலைப்பதிவர்களையும் அல்ல. அது அவர் அவருக்கு நன்றாகவே தெரியும்)
    இனி விடயத்திற்கு வருகின்றேன்

    யோ வாய்ஸ் (யோகா) said...
    "பதிவர்களி்டம் ஏதோ ஒரு விடயம் இருப்பதால் தானே அவர்களை அழைத்திருந்தார்கள். இல்லாவிடின் சும்மா ரோட்டில் போற ஒருத்தரை அழைத்து சந்திப்பு நடத்தியிருக்கலாம்தானே"

    பதிவர்களிடம் விடயம் இருக்கிறது என்று நினைத்து தான் இருக்கிறம் சஞ்சிகை கூப்பிட்டிருக்கும், ஆனால் கடைசியில் தான் புரிந்திருக்கும் இருக்கிறம் சஞ்சிகைக்கு, இதை விட ரோட்டில் சும்மா போறவரை அழைத்து சந்திப்பு நடத்தியிருந்தால் அவர் தனது தெருவோர அனுபவத்தையும் நன்றியையும் பகிர்ந்து சென்றிருப்பார் என்று.

    யோ வாய்ஸ் (யோகா) said...
    நண்பரே ஒரு விடயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். “இருக்கிறம்” ஐ நம்பி பதிவர்கள் பதிவு எழுதவில்லை.

    உண்மை தான் நண்பா, ஏனென்றால் உங்களுக்கு தான் அலட்டுவதற்கு மன்னிக்கவும் எழுதுவதற்கு தங்களுக்கு பிடிக்காதவர்களின் விவகாரங்கள் நிறையவே இருக்கின்றனவே.

    எல்லாம் இருக்கட்டும்.
    இருக்கிறம் சஞ்சிகைக்கு இது ஒரு நல்ல பாடமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.

    கடைசியாக இருக்கிறம் சஞ்சிகைக்கு ஒன்றே ஒன்று சொல்ல விரும்புகின்றேன்.
    "நாயை....... நடுக்கடலில் விட்டாலும் நக்கித் தான் தண்ணி குடிக்கும்" இது யாருக்குப் புரியுதோ இல்லையோ இருக்கிறம் சஞ்சிகைக்கு (அச்சுவலைச் சந்திப்புக்குப் பின்) நன்றாகவே புரிந்திருக்கும்.

    தனுயன்

    ReplyDelete
  24. கனககோபி said...
    இருக்கிறம் சஞ்சிகை இதுவரை மெளனம் காப்பது ஏன்? எங்கள் கருத்துக்கள் பிழையாக இருந்தால் அதை பின்னூட்டமிட்டிருக்கலாமே?

    நீங்கள் சொல்வது உண்மை தான். உங்கள் கருத்துக்கள் பிழையாக இருந்தால் கண்டிப்பாக இருக்கிறம் சஞ்சிகை தனது கருத்தை வழங்கியிருக்கும் என்று நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் தான் பிதற்றலாக உள்ளதே பிறகு எப்படி????
    சிறுபிள்ளைத்தனமான உங்கள் கருத்துக்களுக்கு இருக்கிறம் சஞ்சிகை எப்படி பதில் அளிக்கும்!

    ReplyDelete
  25. சிவா வத்தளை......
    கனககோபி நீர் எல்லாம் ஒரு மனிதர் என்று இருக்கிறீர்.இத்தனை பேரும் நாக்குப் பிடுங்கிற மாதிரி கேட்டதற்குப் பிறகும் உமக்கு மனம் வருகுது தானே எழுத.இல்லை,இல்லை உயிரோடு இருக்க.உங்கள் இருவருக்கும் தான் இருக்கிறமின் சந்திப்பு பிடிக்கவில்லை என்றால் அதில் ஏதோ பின் புலம் இருக்கிறது.
    1-நீங்கள் நினைத்து வந்தது நடக்க வில்லையா?
    2-நீங்கள் நினைத்தது போல உங்களுக்கு மரியாதை கொடுக்க வில்லையா?
    3-உங்களை யார் என்று அடையாளம் காட்ட சபையில் சந்தர்ப்பம் தரவில்லையா?
    4-உங்களுக்கு பிடித்த குடிவகை(Brand)அங்கு இருக்க வில்லையா?
    5-வீட்டுக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு போக விடவில்லையா?
    என்னதான் உங்களது பிரச்சினை?ஏன் யாருக்கும் இல்லாத கோபம்,வெறித்தனம்,விதண்டாவாதம் உங்களுக்கு மட்டும்?மிகத் தெளிவான அழைப்பிதழ் அதை பார்த்து விளங்கி இருக்க வேண்டும்.உங்களுக்கு பிடிக்காத விடயம் என்றால் போயிருக்கக் கூடாது.ஆனால் நீர் போய் நன்றாக உண்டு,குடித்து,பயன் பெற்று விட்டு இப்போ மேலே பிரணவன் குறிப்பிட்டது போல "நன்றாக உண்ட சட்டிக்குள் மலம் கழிக்கிறீர்".பொத்திக்கொண்டு இருமையா நீர்.பயனுள்ளவர்கள் பயன்பெறட்டும்.நீங்கள் இனிமேல் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது விடுங்கள்.ஏனென்றால் உங்களுக்கு மற்றவர்களுடன் சேர்ந்து, பழகி, வாழ்த்தும் மனப்பான்மை இல்லை. ஏன் எரிச்சல்,பொறாமை,மற்றவரை தூற்றி நீங்கள் முன்னுக்கு வரப்பார்க்கிறீர்கள்?
    சுயமாக முன்னுக்கு வரப்பாருங்கள் அல்லது மற்றவருடன் சேர்ந்து முன்னேறப் பாருங்கள்.
    "இருக்கிறம்"உங்கள் எல்லோரையும் இணைக்கத் தானே முயற்சி செய்தது.எல்லோரும் ஒன்றாக இணைந்து தமிழை வளர்ப்போம் என்று தானே நினைத்தது.அது ஏன் உங்களைப் போன்ற சில விசமிகளுக்கு மட்டும் புரியவில்லை. அவ் விழாவில் எத்தனை நல்லவர்கள்,பெரியவர்கள் எல்லாம் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.படங்களைப் பார்க்க எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது.அவர்களுக்கிடையில் முகம் தெரியாத உங்களைப் போன்ற பெயர்,விலாசம் இல்லாத பிழையான வழியில் பெயருக்கும் புகழுக்கும் அலையும் நாய்கள் தான் விழாவை தரங்குறைய வைக்கின்றார்கள்.ஆனால் "காகம் திட்டி மாடு சாகாது" அதை மறக்க வேண்டாம். தேவையில்லாமல்,தேவையில்லாத விடயத்தில் மூக்கை நுழைத்து உங்கள் பெயரை நீங்களே கெடுக்கிறீர்கள்.(உங்களுக்கென்று பெயர் இருந்தால் தானே?)
    ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன்........
    இனி வரும் காலங்களில் இப்படியானவர்களின் ஆக்கங்கள் "இருக்கிறம்"சஞ்சிகையில் வருமேயானால் அவர்கள் இந்தத் தொழிலை விட்டு விட்டு வேறு ஒரு தொழில் சிறப்பாக நடத்தலாம்.(விபச்சாரவிடுதி)வலைப்பதிவு,இணையம்,வேறு நாவல்கள் இப்படியானவற்றில் இருந்து ஆக்கங்களைப் பெற்றுப் போடுவதென்றால் எதற்கு ஆசிரியர் என்று ஒருவர்?
    சரி பத்திரிகைத்துறை என்றால் சவால்கள் நிறைந்தது தான்.

    ReplyDelete
  26. நன்றி ஜெனி,
    அச்சுவலை சந்திப்பில் எதிர் பார்த்தேன்...
    பரவாஜில்லை அடுத்த முறை சந்திப்போம்.

    அந்த சிறுவன் அந்த பிரபல பதிவருடைய பதிவுகள் வாசிப்பதில்லை என்று தெரிந்த படியால் தான் நான் எனது நேரத்தை வீணாக்கி பின்னுட்டம் இடவில்லை. (வாசித்திருந்தால் கொஞ்சம் கூட பொருத்தமில்லாமல் அப்படி ஒரு பதில் வந்திருக்காது...

    நான் எனது பதிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்
    //அனாமி ஒருவர், நான் “பிரபல பதிவர்களின் பதிவுக்கு பின்னூட்டமிட்டு பிரபல்யம் அடையப்பார்ப்பதாக” தனது வயிற்றெரிச்சலை கொட்டியிருந்தார். அவருக்கு போதிய விளக்கம் கொடுத்திருப்பேன். ஆனாலும் வேலிக்கு பின்னால் நின்று குலைக்கும் பெட்டை நாய்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.//

    இங்கும் அனாமிகளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்திருந்தால் தேவை இல்லாத கருத்து மோதல்களை தவிர்த்திருக்கலாம்..

    என்ன செய்வது இன்று எதெதற்கு சண்டை பிடிப்பதென்று பலருக்கு புரியவில்லை.
    "கலி muththipochchu"

    ReplyDelete
  27. அதே வாசகன் தான்.......

    அனைவருக்கும் எனது பணிவான வணக்கமும்,மன்னிப்பும்.....
    நான் ஏற்கனவே கருத்து வெளியிட்டவன் தான்.அதில் யாரையும் குறிப்பிட்டுத்தாக்க வேண்டும் என்று நினைத்து எழுதியதல்ல.ஆகவே பிழைகள் இருப்பின் மன்னித்து மறவுங்கள்.அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறமை முன்னேற்றுங்கள்.நாங்கள் உங்கள் படைப்புகளை பார்க்க காத்திருக்கிறோம்.

    இதில் பதிவன எல்லாம் ஆரோக்கியமான கருத்துகளாக இல்லை.ஆகவே நான் வெளியேறுகிறேன்.

    நன்றி....

    ReplyDelete
  28. சிவா வத்தளை........

    நல்லது வாசகன் உங்கள் முடிவு உண்மையில் நல்லது.எனக்கு நேரம் கிடைப்பது மிகக் குறைவு,அதனால் பின்னூட்டம் இட முடியவில்லை.
    நானும் இனி ஆரோக்கியமில்லாத கருத்துக்கு விடையளிக்க விரும்பவில்லை.
    நான் ஆரம்பத்தில் இருந்து "இருக்கிறம்" சஞ்சிகை வாசிப்பவன் அல்ல,ஒரு சில காரணங்களுக்காக வாசிக்கத் தொடங்கியவன் தான்.இப்போழுது கூட நான் அச் சஞ்சிகையை முழுதாக வாசிப்பதில்லை. ஏனென்றால் அதன் உள்ளடக்கமானது "பயனுள்ள சிலவும், பயனற்ற பலவும் தான்".அதனால் நான் முழுமையாக வாசிப்பதில்லை.நாங்கள் பலர்(நண்பர்கள்,அலுவலக நண்பர்கள் சிலர்) இச் சஞ்சிகையை வாசிப்போம்.நான் விளையாட்டு,தயானந்தாவின் செய்தி,இறுதிப் பக்கத்தில் வரும் சூடான ஒரு வசனம்,மற்றும் சில வேளைகளில் வரும் சுவாரசியமான விடயங்கள் இவற்றை மட்டும் தான் நான் விரும்பி வாசிப்பேன்.என் நண்பர்களும் அனேகமானோர் அப்படித் தான்.
    உண்மையில் இந்தச் சஞ்சிகை எமது நாட்டில் இத்தனை காலம் வருகின்றது உண்மையானால்,இதன் நிலைமை பெரிய அளவில் இருக்க வேண்டும்.ஆனால் இது தலை கீழாக இருக்கிறது.
    நான் இது ஏன் இப்படி நலிவுற்று ஏனோதானோ என வெளிவருகிறது என்று பார்த்தால்..., இதன் காரணம் தலைமைபீடத்தில் இருக்கிறது.எனக்கு இப்போழுது தான் தெரியும் இது அரசசார்பற்ற நிறுவனத்தின் மேற்பார்வையில் ஓடிக்கொண்டு இருக்கிறதென்ற விடயம்.
    "யாற்றயோ காசில உங்கட திருவிழா" உங்களுக்கென்ன சும்ம ஒருவர் ஆசிரியர்,அந்த ஆசிரியர்,இந்த ஆசிரியர், பக்கவடிவமைப்பு,புகைப்படம்,தட்டச்சு,ஓவியம் என்று போடக்கூடிய எல்லாரையும் போட்டுட்டு சும்மா புத்தகம் வாங்கிற எங்களை ஏமாத்துறியள்.
    ஓவியம்,தட்டச்சு,புகைப்படம்,பக்கவடிவமைபு எல்லாத்தையும் குறைகூற முடியாது.
    இதன் ஆசிரியரைக் கேக்கிறேன் ஒரு கேள்வி "இந்தப் புத்தகத்தை நீர் உம்முடைய காசைக் கொடுத்து பொழுதுபோவதற்காக வாங்குவீரா?வாங்கிப் படிப்பீரா?"
    எனக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.நீங்கள் சற்று யோசியுங்கள்.இதில் என்ன நல்ல ஆக்கத்தை நீங்கள் போடுகிறீர்கள்? திரு சஞ்சித் அவர்களே நான் உங்களைத் தான் முழுவதற்கும் குறைகூறுவேன்.நீங்கள் ஆசிரியர் என்று இருக்கிறீர்கள் உங்கள் ஆக்கம் எதனையும் நான் உங்கள் பெயரில் பார்த்ததில்லையே.(வேறு பெயரில் எழுதினால் மன்னிக்கவும்)அதைவிட நீங்கள் என்ன வேலை தான் செய்கிறீர்கள்?மக்களுக்கு என்ன பிடிக்கும்?என்ன பிடிக்காது என்று தெரிந்து எழுதுவது தான் உங்கள் கடமை.அதை விடுத்து நீங்கள் உங்களுக்கு என்ன பிடித்ததை எழுதினால் யார் தான் வாங்குவார்கள்?
    திறமையான ஆசிரியரும்,வழிகாட்டலும் கொண்டு "இருக்கிறம்" இயங்கி இருந்தால் இன்று நீங்கள் இப்படியான (கனக கோபி,யோ வாய்ஸ்)வர்களை அழைத்து ஒன்றுகூடல் நடத்தத் தேவையில்லை.அங்கு வந்த நல்லவர்களை மட்டும் அழைத்து பெரிய மாகாநாடே நடத்தியிருக்கலாம்.

    வெளியில் இருந்து பார்ப்பவன் என்ற ரீதியில் எனது கருத்துகள் தான் இவை.உள் இருப்பவர்களுக்கு எத்தனை சோதனைகளோ "யாமறியோம் பராபரமே"

    ReplyDelete
  29. இருக்கிறம் பத்திரிகையின் ஆரம்பகால ஸ்தாபக வாசகர்.(அறிவாளி ஊடகவியலாளர் லோசன், தான் சத்தியின் ஆரம்பகால ஸ்தாபக பணியாளர் என்று குறிப்பிட்டார். அதுபோலதான். ஆரம்பகால பிற்கால இடைக்கால ஸ்தாபக பணியாளர்கள் யார்? ஸ்தாபக என்றால் முதலிட்டு சத்தியை கட்டிஎழுப்பியவர்கள். இப்படிபட்ட தமிழ் அறிவு மிக்கவர்களை பிரபல்யம் என்று ) இப்படிபட்ட ஊடகவியலாளர்களை எல்லாம் அழைந்து வந்து திரு. குருபரன் மற்றும் திரு. வித்தியாதரனுடன் இணைந்து ஒரு சந்திப்பு நடத்தியதில் கொஞ்சம் கோபம் தான். மற்றும் படி.. இந்த இருக்கிறத்திற்கு அதரவாக த்தான் பேசவந்துள்ளேன். ஆனந்தவிகடன் குமுதம் என்று தமிழ் மக்கள் வாங்கும் பத்திரிகைகள் பற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை. ஏனுங்கோ ஈழத்தமிழர்கள் செய்யும் இருக்கிறம் தான் உங்களுகளுக்கு கிடைத்தா? நான் அறிந்தவரையில் இருக்கிறம் யாழ்ப்பாணத்தை அடிப்படையாக கொண்டது என்று ஒரு பாரிய குற்றச்சாட்டு. தமிழனுக்கு மட்டும் தான் இந்த தலைவிதி. என்ன செய்தாலும் பிழை நொட்டை. அன்று சந்திப்பு தன்னிமயமானபோது கடைசியாக ஒருவர் ஒரு கருத்து சொன்னார். இணைத்தில் இருந்த படியால் என்னேரத்திற்கு அதிகாலை என்ற படியால் நான் தண்ணியில் இல்லாதபடியால் அவர் கூறிய ஒரு அருமையான கருத்து.. பிறை பண்பலை(எப்எம்.என்றாத்தான் எங்கட வானோலி ஊடக விசிறிகளுக்கு விளங்கும்.) ஒரு அரசாங்க வானொலி.கிழக்கை மையப்படுத்தி முஸ்லீம்களை முதன்மைபடுத்தி முஸ்லீம் பெயருடன் வருகின்ற வானோலி. இதற்கு எதிராக எத்தனை முஸ்லீம்கள் குறை சொல்லியிருப்பார்கள். அது தான் ஒற்றுமை. எங்கடைகள் மட்டுமே இப்படி.. எனிந்த தலைகுனிவு தமிழினத்திற்கு? இருக்கிறம் மட்டுமே இலங்கையில் இருந்து வருகின்ற ஓரளவிற்கு தரமான பத்திரிகை. அமுதம் என்று ஒன்று. இலங்கை விகடன் என்று ஒன்று. புகழ்பெற்ற ஒன்றை விட்டால் எம் மக்களுக்கு தனித்துவமாக ஒன்றை செய்ய தெரியாது. (உதாரணம்: வெளிநாட்டு காசில் வெள்ளவத்தையில் உள்ள கொமினிகேசன், நடைகடை. தெகிவளையில் 7 ருபா வெள்வத்தையில் 2.50 போட்டோபிரதி..எங்கே முன்னேறுவார்கள் தமிழர்கள்?
    இருக்கிறத்தில் உள்ள நல்ல விசயங்களை பாருங்கள். "எந்த பத்திரிகையிலும் வாராத செய்தி ஆனந்தவிகடனில் பிரபாகரனின் அப்பா அம்மா 4ம் மாடியில் சித்திரவதை" என்று ஆனந்தவிகடனில்...இப்படிப்பட்ட பிழைப்புவாத சந்தர்ப்பவாத பத்திரிகைகளுடன் பார்க்கும் போது இருக்கிறம் 1000 மடங்கு திறம்..
    வெண்காட்டான்

    ReplyDelete
  30. வெறும் 17வீத முஸ்லீம்களை கொண்ட கிழக்கு மாகாணத்திற்கு(90க்கு முந்தய அல்லது 95 கணக்கு.)இலங்கை வானொலியலும் தொலைக்காட்சியிலும் உள்ள முஸ்லிம்களால் அவர்களுக்கான ஒரு வானோலியை தொடக்கி வேற்றிகரமாக நடக்கிறது. இருக்கிறம் பத்திரிகை யாழ்ப்பாண பத்திரிகை என்று கத்திக்கொண்டுஇருக்கும் யாரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்ததில்லை. இந்த புழுக்களுக்கு(வார்த்தைபிரயோகத்திற்கு மன்னிக்கவும்) தமிழன் என்ன செய்தாலும் நொட்டை பிடிக்க தெரியும். எங்கு தமிழன் நல்லாய் இருக்கிறானன்? இலங்கையின் முதல் நிலை பணக்காரன் ராஜ் ரரஜரத்தினத்திற்கு எதிராக சிங்களவர் அமெரிக்காவில் வழக்கு போடுகிறார்கள். நாம் எமக்கு நாமே குழி வெட்டிகொண்டு இருக்கிறோம். முள்ளிவாய்காலில் புதைத்தது காணாது என்று..இருக்கிறம் பத்திரிகை தரமில்லை என்றால் ஏன் வெறுத்து ஒதுக்குகிறீர்கள். உங்கள் பத்திரிகை. எம் தமிழர்கள் நடத்தும் பத்திரிகை.
    வீரகேசரி நிறுவன உரிமையாளர் குமார் நடேசனுக்கு தமிழ் வாசிக்க தெரியாது. ஆனால் அவர் இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையின் உரிமையாளர். இப்படித்தான் எங்கள் தலைவிதி இருக்கிறது. இருக்கிறம் பிழை விடடால் உரிமையுடன் சுட்டிகாட்டுங்கள். (நம்புகிறேன் அவர்கள் ஏற்றுகொள்வார்கள் என்று.) பத்திரிகையாளனாக அனைத்து பத்திரிகைகளுமே இன்று இணையத்தில் தான் தங்கிஉள்ளன. அதைவிட அனைவரிடமும் ரொய்டர் சந்தா உள்ளது. பல ஆயிரம் மதிப்புள்ள சந்தா மூலம் உலகத்தின் விடயங்கள் உடன் கிடைக்கும் செய்தி தாள்ககு்கும் தமிழை சத்தி எடுக்கும் தமிழ் வானொலிகளுக்கும். அதுவும் இணையம் தான். இருக்கிறமும் இணையம் தான்.

    ReplyDelete
  31. என்ன எல்லாரும் அமைதியாகிடிங்கள்?

    ReplyDelete